search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீல் சாட்டர்ஜி"

    அமெரிக்க நாட்டில் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சாட்டர்ஜியை நியமனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #IndianAmerican #CoalSubsidy #NeilChatterjee
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பெர்க் என்னும் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக கெவின் மேக்கின்டயர் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி உடல்நல குறைவால் பதவி விலகினார்.

    இந்த நிலையில், மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சாட்டர்ஜியை நியமனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



    நீல் சாட்டர்ஜி இதுவரை அந்த ஆணையத்தின் கமிஷனர்களில் ஒருவராக இருந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி முதல் டிசம்பர் 7-ந் தேதி வரை மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியை தற்காலிகமாக வகித்துள்ளார்.

    இவர் நாடாளுமன்ற செனட் சபையின் ஆளுங்கட்சி எரிசக்தி கொள்கை ஆலோசகராகவும் இருந்து வந்தார். அமெரிக்காவில் எரிசக்தி, நெடுஞ்சாலை, பண்ணை சட்டத்தை நிறைவேற்றியதில் முக்கிய பங்கும் வகித்துள்ளார்.

    நீல் சாட்டர்ஜியின் பெற்றோர், 50 ஆண்டுகளுக்கு முன்பாக கொல்கத்தாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீல் சாட்டர்ஜி, அமெரிக்காவின் செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும், சின்சினாட்டி பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்ட பட்டமும் பெற்றுள்ளார். 
    ×